கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: தூத்துக்குடி எஸ்.பிக்கு கூடுதல் பொறுப்பு.!


கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: தூத்துக்குடி எஸ்.பிக்கு கூடுதல் பொறுப்பு.!
x
தினத்தந்தி 4 April 2023 9:11 AM IST (Updated: 4 April 2023 9:11 AM IST)
t-max-icont-min-icon

பற்கள் பிடுங்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தை தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்கள் விசாரித்து வருகிறது.

நெல்லை,

நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பல்வீர்சிங், பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரால் அவர் பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில், சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபிர் ஆலம் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில் பற்கள் பிடுங்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தை தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்கள் விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக நெல்லை மாவட்ட எஸ்.பி. சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில், எஸ்.பி. சரவணன் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதால் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியான பாலாஜி சரவணன் நெல்லை மாவட்டத்தை கூடுதலாக கவனித்துக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story