கைதி ராஜசேகரன் உயிரிழந்த வழக்கு: கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய 30 போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை


கைதி ராஜசேகரன் உயிரிழந்த வழக்கு: கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய 30 போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை
x

சென்னையில் விசாரணை கைதி ராஜசேகரன் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு கடந்த 12-ந்தேதி விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அப்பு என்ற ராஜசேகர் (வயது 31) உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவலர்கள் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இதனிடையே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் காவல்துறை ஒப்படைத்தது.

இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி. சசிதரனை நியமனம் செய்து சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. உத்தரவிட்டார். இதன்படி சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சசிதரன் தலைமையிலான அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய 30 போலீசாரிடம் தற்போது சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story