மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங்பேடி ஆய்வு


மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங்பேடி ஆய்வு
x

குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங்பேடி ஆய்வு செய்தார்.

சென்னை

தாம்பரம்,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் ஆஸ்பத்திரியின் செயல்பாடுகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

புறநோயாளிகள் பிரிவை பார்வையிட்ட அவர், அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், உள்நோயாளிகளின் பிரிவில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார். நோயாளிகளிடம் நலம் விசாரித்து, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டார்.

மேலும் பிரசவ அறை, கழிவறை உள்ளிட்டவைகளை பார்வையிட்டு, அவற்றை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைக்க அறிவுறுத்தினார். பின்னர் ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.6 கோடியில் கட்டப்பட்டு வரும் மகப்பேறு, குழந்தைகள் நலப்பிரிவு கட்டிட பணிகளையும் பார்வையிட்டார். இதையடுத்து தாம்பரம் சானடோரியம் காசநோய் ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.100 கோடியில் மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி அமையவுள்ள இடத்தையும் ககன்தீப் சிங்பேடி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது தேசிய நல வாழ்வு குழும திட்ட இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் அழகுமீனா, குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பழனிவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story