"காவிரி பிரச்சினையை முதல்-அமைச்சர் கவனமாக கொண்டு செல்கிறார்"- வைகோ பேட்டி
“காவிரி பிரச்சினையை முதல்-அமைச்சர் கவனமாக கொண்டு செல்கிறார்”என்று வைகோ கூறினார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் இருந்து நேற்று மாலை மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கர்நாடகத்தில் தமிழக முதல்-அமைச்சர் படம் அவமதிப்பு, திரைப்பட விழாவில் தமிழ் நடிகர் சித்தார்த் அவமதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தமிழக அரசு கண்டனத்தை தெரிவிக்காதது குறித்து கேட்கிறீர்கள். உச்ச நீதிமன்றம் இந்த பிரச்சினையில் நியாயத்தன்மையுடன் நடந்து கொள்கிறது. கர்நாடகத்திலும் தமிழர்கள் இருக்கிறார்கள். அங்கு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என கன்னடத்தவர்கள் நினைக்கின்றார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் முதல்-அமைச்சர் காவிரி பிரச்சினையை மிகவும் கவனமாக கொண்டு செல்கிறார். நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு என எதுவும் நடக்கவில்லை. அது பற்றி இன்னும் பேசவில்லை. பத்திரிகைகள் கற்பனையில் எழுதுகிறார்கள். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 33 சதவீதம் என அறிவித்தது எந்த வரவேற்பையும் பெறவில்லை. பிரதமர் மோடி அவராக வரவேற்பு பெற்று இருக்கிறது என கூறிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.