தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற செயற்குழு கூட்டம்
பாளையங்கோட்டையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற செயற்குழு கூட்டம் நடந்தது.
திருநெல்வேலி
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நெல்லை மண்டல செயற்குழு கூட்டம் பாளையங்கோட்டையில் நடந்தது. மாநில செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் ஜெயசீலன், ஆறுமுகம் சாமி, ராஜகுமார், செயலாளர்கள் ஜான்சன், கனகராஜ், காந்திராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் 2015-ம் ஆண்டு முதல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு உடனே பணிநியமன ஒப்புதல் வழங்க வலியுறுத்தி வருகிற 28-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது.
Related Tags :
Next Story