ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம்


ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம்
x

குற்றாலத்தில் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம் நடைபெற்றது.

தென்காசி

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தென்காசி மாவட்ட சிறப்பு பொதுக்குழுக்கூட்டம் நேற்று குற்றாலம் அருகே உள்ள குடியிருப்பு பரூக் நினைவு ஆரம்ப பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் மாரிமுத்து வரவேற்று பேசினார். மாநில மையத்தின் மேலிடப்பார்வையாளர் முருகன் சிறப்புரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் 14-வது அமைப்பு தேர்தல் குறித்து பேசினார்.

கூட்டத்தில், ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தல் பணியை பாதிக்கும் இ.எம்.ஐ.எஸ். பதிவுகளை கல்வித்துறை கைவிட வேண்டும். ஆசிரியர்களின் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும். தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும். அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, உயர் கல்வி பயில்வதற்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட அரசு திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் துரைராஜ், மாடசாமி மற்றும் கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story