ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்; எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டத்தில் தீர்மானம்


ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்; எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டத்தில் தீர்மானம்
x

தாழையூத்து பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மருத்துவ சேவை அணி செயற்குழு கூட்டம் மேலப்பாளையத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் ரகுமத்துல்லா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அப்துல் மஜீத் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் கனி கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் இயங்காமல் இருக்கும் லிப்ட்டை உடனடியாக சரிசெய்து நோயாளிகளின் சிரமத்தை போக்க வேண்டும். தாழையூத்து பகுதியில் மக்களின் நலன்காக்க ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி மாவட்ட செயலாளர் மீரான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story