வீட்டில் பிணமாக கிடந்த பூசாரி


வீட்டில் பிணமாக கிடந்த பூசாரி
x
தினத்தந்தி 21 July 2023 12:30 AM IST (Updated: 21 July 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரியில் வீட்டில் பூசாரி பிணமாக கிடந்தார்.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி மீனாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜகோபால் அய்யர்- சுப்புலட்சுமி தம்பதியரின் மகன் ராஜேஷ் (வயது 40). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் சிவகிரி பகுதியில் உள்ள சிறிய, பெரிய கோவில்களில் பூஜைகள் செய்தும், கும்பாபிஷேகம் போன்ற விசேஷங்களுக்கும் சென்று வந்தார். இவர் தற்போது வடக்கு ரதவீதியில் உள்ள தனியார் குடியிருப்பில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று அவரது வீடு வெகுநேரமாகியும் திறக்கவில்லை. அங்கிருந்து துர்நாற்றமும் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் சிவகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வீடு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால், கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ராஜேஷ் காதில் ஹெட்போன் மாட்டியபடி உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் இறந்து 2 நாட்கள் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story