கோவிலில் நகை திருடிய பூசாரி கைது


கோவிலில் நகை திருடிய பூசாரி கைது
x

கோவிலில் நகை திருடிய பூசாரி கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை அருகே முதுமொத்தன்மொழி முத்தாரம்மன் கோவிலில் பூசாரியாக நாலந்துலாவை சேர்ந்த மகேஷ் (வயது 30) பணியாற்றினார். இந்த கோவிலுக்கு அதே ஊரைச் சேர்ந்த சண்முகவேல் நேர்த்திக்கடனாக 3 தங்க பொட்டு தாலியை வழங்கினார். அதனை சுவாமி கழுத்தில் அணிந்தனர்.

தொடர்ந்து சுவாமியின் கழுத்தில் ஏற்கனவே அணிவிக்கப்பட்டு இருந்த நகைகளை கோவில் நிர்வாகிகள் பரிசோதித்தனர். இதில், அவை கவரிங் நகைகள் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா காமராஜ் திசையன்விளை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கோவிலில் சுவாமி தங்க நகைகளை பூசாரி மகேஷ் திருடி விட்டு, அதற்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து மகேஷை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 8¼ பவுன் நகைகள் மீட்கப்பட்டன. பின்னர் மகேஷை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story