சென்னையில் டெங்கு உள்ளிட்ட நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் - மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்
தினந்தோறும் 35 முதல் 40 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மழைக்காலத்தை முன்னிட்டு பொது சுகாதாரம் சார்ந்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நகராட்சி நிர்வாக இயக்குநரகம், நோய்த்தடுப்பு பிரிவுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தினந்தோறும் 35 முதல் 40 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். இதில் டெங்கு காய்ச்சல் மட்டுமின்றி, சளி காய்ச்சல், சுவாச நோய்கள், வயிற்றுப்போக்கு, தோல் வியாதிகள் உள்ளிட்ட நோய்களுக்கும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். அதே போல் கொசு ஒழிப்பிற்கு தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story