குறுவை அறுவடை, சம்பா சாகுபடி ஆயத்த பணிகள்


குறுவை அறுவடை, சம்பா சாகுபடி ஆயத்த பணிகள்
x
தினத்தந்தி 7 Sept 2023 12:15 AM IST (Updated: 7 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி பகுதியில் குறுவை அறுவடை, சம்பா சாகுபடி ஆயத்த பணிகளை சர்க்கரை ஆலைத்துறை கூடுதல் ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி பகுதியில் குறுவை அறுவடை, சம்பா சாகுபடி ஆயத்த பணிகளை சர்க்கரை ஆலைத்துறை கூடுதல் ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாரத்தில் குறுவை அறுவடை பணிகள் மற்றும் சம்பா சாகுபடி ஆயத்த பணிகள் குறித்து சர்க்கரை ஆலைத் துறை கூடுதல் ஆணையர் அன்பழகன், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். சீர்காழி அருகே கன்னியாகுடி கிராமத்தில் சம்பா பாய் நாற்றங்கால் மற்றும் சட்டநாதபுரம் கிராமத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தரிசு நிலத்தினை சாகுபடிக்கு கொண்டுவருதலின் கீழ் கருவேல மரத்தினை அகற்றி அந்த வயலில் நெல் சாகுபடி செய்ததை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நேரடி விதைப்பு

அப்போது கூடுதல் ஆணையர் விவசாயிகளிடம் கூறுகையில், சம்பா சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் நேரடி விதைப்பு மத்திய மற்றும் குறுகிய கால ரகங்களை பயன்படுத்தி விதைப்பு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குனர் சேகர், வேளாண்மை துணை இயக்குனர்கள் மதியரசன், ஜெயபாலன், செயற் பொறியாளர் சண்முகம், சீர்காழி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன், தாசில்தார் செந்தில்குமார், வேளாண்மை அலுவலர் கண்ணன், உதவி வேளாண்மை அலுவலர்கள் ராமசந்திரன், ராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முன்னதாக திருப்புங்கூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story