செங்கம் அரசு மருத்துவமனையில் நீண்ட நேரம் காத்திருக்கும் கர்ப்பிணிகள்


செங்கம் அரசு மருத்துவமனையில் நீண்ட நேரம் காத்திருக்கும் கர்ப்பிணிகள்
x

செங்கம் அரசு மருத்துவமனையில் நீண்ட நேரம் கா்ப்பிணிகள் காத்திருக்கின்றனர். இதனால் கூடுதல் மகப்பேறு மருத்துவரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவண்ணாமலை

செங்கம் அரசு மருத்துவமனையில் நீண்ட நேரம் கா்ப்பிணிகள் காத்திருக்கின்றனர். இதனால் கூடுதல் மகப்பேறு மருத்துவரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மகப்பேறு மருத்துவர்கள் நியமிக்க வேண்டும்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் காரப்பட்டு வட்டார மருத்துவமனைகளில் இருந்து ஒவ்வொரு வாரமும் கர்ப்பிணிகள் பரிசோதனை செய்த பின்பு மகப்பேறு சிறப்பு மருத்துவரிடம் ஆலோசனை, சிகிச்சைகள் பெற செங்கம் தலைமை அரசு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்யப்படுகிறது.

மேலும் செங்கத்தில் உள்ள கிராம பகுதியில் இருந்து பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணிகள் சிகிச்சைக்காக செங்கம் தலைமை அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். கர்ப்பிணிகள் ஸ்கேன் செய்யவும், மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவரிடம் ஆலோசனை, சிகிச்சை பெறுவதற்காகவும், அதோடு மட்டுமல்லாமல் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் உள்பட பல்வேறு சிகிச்சைகள் அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் ஒவ்வொரு வாரமும் கர்ப்பிணிகள் சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற வரும் போது மகப்பேறு மற்றும் பெண்கள் மருத்துவரை சந்திக்க மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. அதிக அளவில் கர்ப்பிணிகள் வருவதை தொடர்ந்து கூடுதலாக மகப்பேறு மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என கர்ப்பிணிகளும், பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தரையில் அமர்ந்திருந்த கர்ப்பிணிகள்

இந்த நிலையில் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணிகள் மணிக்கணக்கில் மருத்துவரை சந்திக்க காத்திருந்தனர். போதிய இடம் இல்லாததால் கர்ப்பிணிகள் பலர் தரையில் அமர்ந்திருந்தனர்.

மேலும் பிரசவத்திற்கு வரும் கர்ப்பிணிகளை பெரும்பாலும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறும், செங்கம் தலைமை அரசு மருத்துவமனையில் போதிய வசதி இல்லை என கூறியும் அனுப்பப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே கூடுதல் மகப்பேறு மருத்துவர்களை நியமித்து தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கி கர்ப்பிணிகள் அலைக்கழிக்கப்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story