கர்ப்பிணி யானை உயிரிழப்பு


கர்ப்பிணி யானை உயிரிழப்பு
x
தினத்தந்தி 19 Sept 2023 3:15 AM IST (Updated: 19 Sept 2023 3:15 AM IST)
t-max-icont-min-icon

போளுவாம்பட்டி வனச்சரகத்தில் கர்ப்பிணி யானை உயிரிழந்தது.

கோயம்புத்தூர்


ஆலாந்துறை


கோவை வனக்கோட்டம் போளுவாம்பட்டி வனச்சரகம் நரசீபுரம் பிரிவு, கழுதை ரோடு சரக பகுதியில் வனப் பணியாளர்கள் நேற்று ரோந்து சென்றனர். அப்போது கிணத்துக்குளி ஓடை தடுப்பணைக் குள், பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது.


இதைத்தொடர்ந்து கோவை வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் செந்தில்குமார், போளுவாம்பட்டி வனச் சரக அலுவலர் சுசீந்திரநாத் மற்றும் வனப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் முன்னிலையில் ஆனைமலை புலிகள் காப்பக வன கால் நடை டாக்டர் சுகுமார், நரசீபுரம் உதவி கால்நடை டாக்டர் கார்த்தி கேயன் ஆகியோர் இறந்த பெண் யானையின் உடற்கூறாய்வு செய்யப் பட்டது. அதில் இறந்த பெண் யானைக்கு 22 முதல் 25 வயது இருக்க லாம். அந்த யானை இறந்து 2 நாட்கள் ஆகி இருக்கலாம்.


இறந்த யானையின் கர்ப்பப்பையில் 20 முதல் 22 மாதமான சிசு இருந்து உள்ளது. சினைப்பை பிரச்சினை காரணமாக பெண் யானை இறந்து இருக்கலாம் என்று வன கால்நடை டாக்டர்கள் தெரிவித்தனர்.



Next Story