ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x

மாவட்டத்தில் ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

ஈரோடு

மாவட்டத்தில் ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

கோபி

கோபி பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. இதையொட்டி கோபி மொடச்சூரில் உள்ள சோமேஸ்வரர் கோவிலில் சாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டன. பின்னர் நந்திக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

இதேபோல் கோபி பாரியூரில் உள்ள அமரபணீஸ்வரர் கோவில், அக்ரஹாரம் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவில், கூகலூரில் உள்ள மீனாட்சி அம்பிகா சமேத நஞ்சுண்டேஸ்வரர் கோவில், பச்சைமலை மரகத ஈஸ்வரர் கோவில், காசிபாளையம் காசி விஸ்வநாதர் கோவில், பவளமலை கைலாசநாதர் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

அம்மாபேட்டை

அம்மாபேட்டை காவிரி கரையில் அமைந்துள்ள மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோவிலில் நந்தி சிலைக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர்களின் உற்சவர் சிலை அலங்கரிக்கப்பட்டு கோவில் வளாகத்தை வலம் வந்தது. விழாவில் சேலம் மாவட்டம் கோனேரிப்பட்டி, பூலாம்பட்டி, தேவூர், எடப்பாடி, நெடுங்குளம் மற்றும் அம்மாபேட்டை, குருவரெட்டியூர், சித்தார், பூனாச்சி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு் தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் மற்றும் அருகே உள்ள ஈஸ்வரன் கோவில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. ஊஞ்சலூர் நாகேஸ்வரர் கோவிலில் நாகேஸ்வரர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை நடந்தது. அதனைத்தொடர்ந்து நாகேஸ்வரர், அம்மன் நந்தி வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதேபோல் கொளாநல்லி பாம்பலங்கார சாமி கோவில், கொந்தளம் நாகேஸ்வர சாமி கோவிலில் உள்ள நந்தி, பழனிக்கவுண்டம்பாளையம் பழனியாண்டவர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.


Next Story