சிவகிரி திருநீலகண்ட சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு
சிவகிரி திருநீலகண்ட சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
சிவகிரி:
சிவகிரியில் பழைய போலீஸ் நிலையம் எதிர்ப்புறம் அமைந்துள்ள திருநீலகண்ட சுவாமி கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்தீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான நறுமண பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் திருநீலகண்ட சுவாமி, மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதன்பிறகு சுவாமி, அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தில் உலா வந்தனர். சப்பரத்துக்கு முன்பு நூற்றுக்கணக்கான பெண்கள் தேவார பக்தி பஜனை பாடல்கள் பாடியபடி சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமி, சொக்கநாதன்புத்தூர் தவநந்தி கண்டேஸ்வரர் கோவில், தென்மலை திரிபுரநாத சுவாமி, சிவபரிபூரணசுந்தரி அம்மன் கோவில், தாருகாபுரம் மத்தியஸ்த நாதர் கோவில், ராமநாதபுரம் சுயம்புலிங்க சுவாமி கோவிலில் உள்ள நந்தீஸ்வரருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.