காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ விழா


காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ விழா
x
தினத்தந்தி 1 Jun 2023 6:45 PM GMT (Updated: 1 Jun 2023 6:46 PM GMT)

கள்ளக்குறிச்சி காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் உள்ள விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்திபகவானுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை அர்ச்சகர் சட்ட கணேசன் செய்திருந்தார். இதேபோல் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள பல்வேறு சிவன்கோவில்களிலும் பிரதோஷத்தை யொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.


Next Story