ஆசிரியர்களுக்கு 2-ம் பருவஎண்ணும், எழுத்தும் பயிற்சி


ஆசிரியர்களுக்கு 2-ம் பருவஎண்ணும், எழுத்தும் பயிற்சி
x

எருமப்பட்டியில் ஆசிரியர்களுக்கு 2-ம் பருவ எண்ணும், எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.

நாமக்கல்

எருமப்பட்டி

எருமப்பட்டியில் உள்ள வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வளமையம் சார்பில் எருமப்பட்டி ஒன்றியத்தில் பணியாற்றும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் 2-ம் பருவத்திற்கான பயிற்சி வட்டார அளவில் 2-ம் கட்டமாக 4 மற்றும் 5-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு ஆகிய இரண்டு நாட்கள் பயிற்சி நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் அருண் தலைமையில் நடைபெற்றது. வட்டார வள மைய பார்வையாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மணிவண்ணன் பார்வையிட்டு எண்ணும் எழுத்தும் பயிற்சி குறித்து பேசினார். மேலும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி பயிற்சியை பார்வையிட்டார். பயிற்சியில் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பாடத்திட்டத்தின் புதுமைகள், மாதிரி வகுப்புகள், வரைபடம் வரைதல், கடிதம் எழுதுதல் போன்றவற்றை மாணவர்களுக்கு எளிமையாக கற்பித்தல் மூலம் கருத்தாளர்கள் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். கருத்தாளர்களாக எருமப்பட்டி வட்டார ஆசிரியர்கள் செயல்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பானுமதி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.


Next Story