டிஜிட்டல் வாகனம் மூலம் பொதுமக்களுக்கு மின் சிக்கன விழிப்புணர்வு


டிஜிட்டல் வாகனம் மூலம் பொதுமக்களுக்கு மின் சிக்கன விழிப்புணர்வு
x
தினத்தந்தி 27 July 2023 12:15 AM IST (Updated: 27 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு டிஜிட்டல் வாகனம் மூலம் பொதுமக்களுக்கு மின் சிக்கன விழிப்புணர்வு நிகழ்ச்சியை ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி கோவிலில் ஆடித்தபசை முன்னிட்டு சுவாமி சன்னதியில் சங்கரன்கோவில் நகர்ப்புற மின்வினியோக பிரிவு சார்பில் சிறப்பு மின்வாரிய சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மின்சார சிக்கனம், மின்சாரத்தை எவ்வாறு பயன்படுத்துவது, மின்சாதனங்களில் இருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது? என்பதை உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகள் அடங்கிய டிஜிட்டல் வாகனம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி வாகனத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு மின்சிக்கனம், மின் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் வாசகம் அடங்கிய மஞ்சள் பை, எல்.இ.டி பல்பு வழங்கப்பட்டது. மேலும் மின் கட்டண அட்டைகளும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் யூனியன் தலைவர் லாலா சங்கர பாண்டியன், மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகரச் செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story