இன்றும், நாளை மறுநாளும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


இன்றும், நாளை மறுநாளும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x

சங்ககிரி, ஐவேலி ஆகிய துணை மின்நிலையங்களில் இன்றும், நாளை மறுநாளும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

சேலம்

சங்ககிரி:

சங்ககிரி ஐவேலி துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோக பராமரிப்பு பணி நடக்கிறது. தொடர்ந்து சங்ககிரி டவுன், ெரயில் நிலையம், ஐவேலி, அக்கமாபேட்டை, வடுகப்பட்டி, இடையப்பட்டி, வளையச்செட்டிபாளையம், இருகாலூர், ஆவரங்கம்பாளையம், தேவண்ணகவுண்டனூர், சுண்ணாம்பு குட்டை, ஒலக்கசின்னானூர், தங்காயூர், வைகுந்தம், வெள்ளையம்பாளையம், காளிகவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது. மேலும் சங்ககிரி துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினிேயாக பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே படைவீடு, பச்சாம்பாளையம், சங்ககிரி ெரயில் நிலையம், சங்ககிரி மேற்கு, சன்னியாசிபட்டி, நாகிச்செட்டிபட்டி, ஊஞ்சகொரை, வெப்படை, அம்மன்கோவில், பாதரை, சின்னாகவுண்டனூர், சவுதாபுரம், மக்கிரிபாளையம்‌, முதலைமடையனூர், தண்ணீர் பந்தல் பாளையம், திருநகர் பைபாஸ் சிட்டி, உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது. மேலும் பல்லகாபாளையம் துணை மின்நிலையத்திலும் நாளைமறுநாள் பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்லகாபாளையம், வளையகாரனூர், ஆலத்தூர், புதுப்பாளையம், எக்ஸல் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.இந்த தகவலை சங்ககிரி மின்வாரிய இயக்கமும், பராமரிப்பு செயற் பொறியாளர் எஸ்.உமாராணி தெரிவித்துள்ளார்.


Next Story