வெங்கமேடு பகுதியில் நாளை மின்நிறுத்தம்


வெங்கமேடு பகுதியில் நாளை மின்நிறுத்தம்
x

வெங்கமேடு பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

கரூர் கோட்டத்திற்குட்பட்ட மண்மங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் வெங்கமேடு, சேலம் மெயின்ரோடு, வெண்ணைமலை, காதப்பாறை, காளிப்பாளையம், பூலாம்பாளையம், பண்டுதகாரன்புதூர், மண்மங்கலம், செம்மடை, சிட்கோ, கடம்பன்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் தெரிவித்துள்ளார்.


Next Story