தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்


தினத்தந்தி 20 Dec 2022 12:15 AM IST (Updated: 20 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே மருதங்குடி ஊராட்சியில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி அருகே மருதங்குடி ஊராட்சியில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

சீர்காழி அருகே மருதங்குடி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.இந்த ஊராட்சியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மின் மோட்டார்கள் உள்ளன. இந்த நிலையில் நிம்மேலி ஊராட்சியில் இருந்து மருதங்குடி ஊராட்சிக்கு செல்லும் சாலையில் மின் கம்பங்கள் சாய்ந்தும், மின் கம்பிகள் மிகவும் தாழ்வாகவும் செல்கிறது.

தீவிபத்து ஏற்படும் அபாயம்

மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் இந்த சாலையில் செல்லும் வாகனங்களில் மின்கம்பி உரசி தீவிபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. . இதை தொடர்ந்து இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மரக் கட்டைகளைக் கொண்டு உயர்த்தி வைத்துள்ளனர். இந்த மரக்கட்டை சாய்ந்தால் சாலையில் செல்லும் வாகனங்கள் மற்றும் சாலையில் செல்பவர் மீது மின்கம்பி உரசி விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மருதங்குடி சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும். மேலும் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளையும் சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Next Story