மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை


மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை
x
தினத்தந்தி 30 Sept 2023 12:15 AM IST (Updated: 5 Oct 2023 1:44 PM IST)
t-max-icont-min-icon

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடைபெற்றது.

விழுப்புரம்


மேல்மலையனூர்,

மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

பின்னர், உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார். மாலை 6 மணியளவில் உற்சவ அம்மன் பம்பை, மேளம் முழங்க விளக்கு பூஜை செய்யும் இடத்தில் எழுந்தருளினார்.

பின்பு பெண்கள் விளக்கு பூஜை செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு மகாதீபாராதனை காட்டியவுடன் விளக்கு பூஜை முடிவடைந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் பூசாரி, அறங்காவலர்கள் தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story