தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பாளையங்கோட்டையில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி
அஞ்சல்துறையை கார்ப்பரேஷன் ஆக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சம்மேளனத்தினர், புறநிலை ஊழியர் சங்கத்தினர் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் தபால்துறை பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.
பாளையங்கோட்டை தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் இருந்து ஊழியர்கள் வெளியே வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். கன்வீனர் ஜேக்கப்ராஜ் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் அருண்குமார், சுப்பிரமணியன், தங்கராஜ், வேலு, சிவகணேஷ், லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story