தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

தனியார் மயமாக்குவதை கைவிடக்கோரி நாகர்கோவிலில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

தபால்துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட 18 மாத நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். தபால் நிலையங்கள், ஆர்.எம்.எஸ். அலுவலகங்களில் வாரத்துக்கு 5 நாட்கள் வேலை முறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து இந்திய தபால் ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் நாகர்கோவிலில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சங்கங்கள் கிளை தலைவர்கள் வைத்தீஸ்வரன், வர்கீஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். செயலாளர்கள் சுரேஷ் குமார், ராமன் பிள்ளை ஆகியோர் முன்னிலை விகித்தனர். இதில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story