பொது வினியோகத்திற்கான கோதுமை ஒதுக்கீடு அதிகரிக்க வாய்ப்பு
வரும் மாதங்களில் பொது வினியோகத்திற்கான கோதுமை ஒதுக்கீடு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
வரும் மாதங்களில் பொது வினியோகத்திற்கான கோதுமை ஒதுக்கீடு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
கோதுமை கொள்முதல்
மத்திய அரசு கோதுமை கொள்முதலை தாமதமாக தொடங்கினாலும் ஏப்ரல் 24-ந் தேதி வரை 17.08 மில்லியன் டன் கோதுமை கொள்முதல் செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 13.69 மில்லியன் டன் கோதுமை தான் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. கடந்த ஏப்ரல் 16-ந் தேதி வரை கோதுமை கொள்முதல் குறைவாக இருந்த நிலையில் அதன் பின்பு வரத்து அதிகமானதால் கோதுமை கொள்முதலில் சூடு பிடித்தது. கடந்த ஏப்ரல் 16-ந் தேதி வரை 2.3 மில்லியன் டன் கோதுமை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. தற்போதைய நிலையில் ஏப்ரலில் 34.15 மில்லியன் டன் கோதுமை கொள்முதல் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கோதுமை சாகுபடி அதிகம் உள்ள மாநிலங்களான பஞ்சாப், மத்திய பிரதேசம், ஹரியானா உள்பட அனைத்து மாநிலங்களிலும் கோதுமை கொள்முதல் அதிகரித்து உள்ளது.
ஒதுக்கீடு அதிகரிக்க வாய்ப்பு
கடந்த 2022-ம் ஆண்டு பொது வினியோகத் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கோதுமை அளவில் மத்திய அரசு கடந்த ஆண்டு கோதுமை சாகுபடி குறைவால் 6 லட்சம் டன் கோதுமை ஒதுக்கீட்டை குறைத்தது. எனவே தற்போது கோதுமை சாகுபடி மற்றும் கொள்முதல் அதிகரித்துள்ள நிலையில் வரும் மாதங்களில் பொதுவினியோக திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் கோதுமை அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு பொது வினியோக திட்டத்திற்கான கோதுமை ஒதுக்கீடு குறைக்கப்பட்டது.
எனவே தற்போது தமிழகத்திற்கும் வரும் மாதங்களில் பொதுவினியோகத்திட்டத்திற்கான கோதுமை ஒதுக்கீடு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என வழங்கல் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.