பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநாடு


பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநாடு
x

செங்கோட்டையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநாடு நடந்தது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பில் மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற முழக்கத்தோடு மக்கள் சங்கமம் கொடியேற்றம், கண்காட்சி மற்றும் மாநாடு நிகழ்ச்சி நடந்தது. நகர தலைவர் சாதிக் அலி தலைமை தாங்கினார். மருதநாயகம் கண்காட்சி அரங்கத்தை நெல்லை மாவட்ட மண்டல தலைவர் திப்புசுல்தான் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் அப்துல்பாசித் தொடக்கவுரையாற்றினார். எஸ்.டி.பி.ஐ மாவட்ட பொதுச் செயலாளர் சிக்கந்தர் மற்றும் நேஷனல் விமன்ஸ் பிரண்ட்டின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில்பீவி, வடகரை நகர தலைவர் முத்துமுஹம்மது, மாநில துணைத்தலைவர் ஹாலித்முகம்மது மற்றும் ஆல் இந்தியா இமாமஸ் கவுன்சிலின் மாநில பொதுசெயலாளர் அர்ஷத்முஹம்மது ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியில் செங்கோட்டை ஜமாத்தார்கள், எஸ்.டி.பி.ஐ. மற்றும ்பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் நகர கிளை நிர்வாகிகள், செயல்வீரர்கள் உள்பட பலா் கொண்டனர்.


Next Story