தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு


தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு
x

நாமக்கல் மாவட்டத்தில் 25 மையங்களில் நடந்த தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வில் 7,528 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். 596 பேர் தேர்வுக்கு வரவில்லை.

நாமக்கல்

திறனறி தேர்வு

தமிழ்மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில், 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பிளஸ்-1 படிக்கும் மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர் பகுதிகளில் 25 பள்ளிகளில் தேர்வு மையம் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இம்மாவட்டத்தில் தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வுக்கு, 8,124 மாணவ, மாணவிகள் விண்ணப்பம் செய்து இருந்தனர். அவர்களில் 596 தேர்வர்கள் கலந்து கொள்ளவில்லை. மீதமுள்ள 7,528 மாணவ, மாணவிகள் மட்டுமே தேர்வை எழுதினர்.

போலீஸ் பாதுகாப்பு

மாநில அளவில் இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பள்ளி கல்வித்துறை மூலம் மாதம் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அதில் 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும். மீதி 50 சதவீதம் பேர், அரசு மற்றும் அரசுஉதவிபெறும் பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையொட்டி அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 12 மணிக்கு முடிவடைந்தது.


Next Story