தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு


தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு
x

நாமக்கல் மாவட்டத்தில் நாளை 25 மையங்களில் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடைபெற உள்ளது.

நாமக்கல்

திறனறித் தேர்வு

தமிழகம் முழுவதும் பிளஸ்-1 மாணவர்களுக்கு தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 8,124 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். இதற்காக 25 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் இந்த தேர்வு தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடந்தது. முதன்மை கல்வி அதிகாரி மகேஷ்வரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்வு முடியும் வரை எக்காரணம் கொண்டும் தேர்வர்களை தேர்வு மையத்தினை விட்டு வெளியே விடக்கூடாது. ஒவ்வொரு தேர்வு அறையிலும் 20 மாணவர்களை மட்டுமே தேர்வு எழுத ஏற்பாடு செய்ய வேண்டும். வினாத்தாள் கட்டுகள் காலை 8.45 மணிக்குள் முதன்மை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

வருகை விவரம்

தேர்வு தொடங்கிய 30 நிமிடத்திற்குள் மையத்தில் உள்ள தேர்வர்களின் வருகை விவரத்தை அரசு தேர்வுகள் உதவி இயக்குனருக்கு, முதன்மை கண்காணிப்பாளர்கள் தெரிவிக்க வேண்டும். நுழைவு சீட்டில் புகைப்படம் மாறி இருந்தாலோ அல்லது புகைப்படம் இல்லாமல் இருந்தாலோ, அதே நுழைவு சீட்டில் உள்ள தேர்வரின் புகைப்படம் ஒட்டி அதில் பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் முத்திரையுடன் சான்றோப்பம் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மணிவண்ணன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் கலந்து கொண்டனர்.


Next Story