பூணூல் மாற்றும் நிகழ்ச்சி


பூணூல் மாற்றும் நிகழ்ச்சி
x

கிருஷ்ணகிரியில் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

கிருஷ்ணகிரி

ஆவணி அவிட்டம் எனும் சடங்கு, உபநயனம் செய்து கொண்ட பிராமணர் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் அவிட்டம் நட்சத்திரத்தோடு கூடிய பவுர்ணமியில் கடைபிடிக்கும் வழிபாடு ஆகும். ஆவணி அவிட்டம், ஆடி மாத அமாவாசைக்கு பிறகு அவிட்டம் நட்சத்திர நாளில் வரக்கூடிய விழாவாகும். இதில், காயத்ரி உபதேசம் பெற்றவர்கள் தங்களுடைய பழைய பூணூலை எடுத்து விட்டு புதிய பூணூலை அணிந்து கொள்வர்.

அதன்படி நேற்று ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி பிராமணர் நலச்சங்கம் சார்பில் புதுப்பேட்டை சங்கர மடம், புதுப்பேட்டை வீர ஆஞ்சநேய ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனம் கோவில், பழையபேட்டை சீதாராம வீர ஆஞ்சநேய சமேத ராகவேந்திர சாமிகள் கோவில், பழையபேட்டை வாசுகி கன்னிகா பரமேஸ்வரி கோவில்களில் நேற்று காலை, 6.30 மணிக்கு பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆரிய வைஷ்ய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சிறப்பு பூஜைகள் செய்து, காயத்ரி மந்திரங்களைச் சொல்லி, கணபதி ஹோமங்கள் நடத்தி தங்களின் பழைய பூணூலை எடுத்து விட்டு புதிய பூணூலை அணிந்து கொண்டனர். இதில், 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story