காளியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா
கடையநல்லூர் அருகே காளியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடந்தது.
தென்காசி
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே குமந்தாபுரத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் 24-ம் ஆண்டு பூக்குழி திருவிழா கடந்த 19-ந்தேதி காப்பு கட்டுதலுதடன் ெதாடங்கியது. விழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, கிராமிய கலை நிகழ்ச்சிகள், நையாண்டி மேளம், வில்லிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று பூ வளர்த்தல், தீர்த்த குடங்கள் அழைத்தல், பால்குடம், பூப்பெட்டி, முளைப்பாரி, அக்னி சட்டி ஊர்வலம் ஆகியவை நடந்தது. மாலையில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். தொடர்ந்து கரகாட்டம், அம்மனுக்கு சிறப்பு பூஜை, சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story