திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா


திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா
x

வீரவநல்லூர் திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி

சேரன்மகாதேவி:

வீரவநல்லூரில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை பூக்குழி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான பூக்குழி திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா, சுவாமி-அம்பாள் சப்பரம் வீதி உலா, அர்ச்சுணர் சுவாமி தவக்கோலம் வீதிஉலா, தபசு காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணிக்கு பால்குடம் எடுத்து வருதல், இரவு 7 மணிக்கு மேல் பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, கோவிந்தா... கோவிந்தா... என்ற கோஷத்துடன் பூக்குழி இறங்கினர். தொடர்ந்து சுவாமி-அம்பாள் சப்பரம் திருவீதி உலா நடைபெற்றது.

விழாவில் வீரவநல்லூர் பேரூராட்சி தலைவர் சித்ரா, வீரவநல்லூர் நகர கூட்டுறவு வங்கி தலைவர் சுப்ரமணியன், தி.மு.க. நகர செயலாளர் சுப்பையா, கவுன்சிலர்கள் சிதம்பரம், அனந்தராமன், சந்தானம், கல்பனா, அங்கம்மாள், முத்துகுமார், ஆறுமுகம் மற்றும் இசக்கி சரவணன், குமரன், பார்வதிநாதன், பா.ஜ.க. சேரன்மாதேவி மேற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் சிவபாலன், சுரேஷ்குமார், சரவணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story