புளியங்குடி தர்காவில் பூக்குழி திருவிழா
புளியங்குடி தர்காவில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.
தென்காசி
புளியங்குடி:
முகரம் பண்டிகையை முன்னிட்டு புளியங்குடியில் உள்ள அசன் உசேன் தர்காவில் முகரம் கந்தூரி விழா நடைபெற்றது. மாலையில் தர்காவில் இருந்து பச்சைக் களை ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியே நடைபெற்றது. பின்னர் கொடியேற்றுதல், சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு ஏராளமான இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து அசன் உசேன் நினைவாக தர்கா வளாகத்துக்குள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். புளியங்குடியில் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த திருவிழா நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story