தேன்கனிக்கோட்டையில்அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை
கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை காசி விஸ்வநாதர் கோவிலில் அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 55-வது ஆண்டு மண்டல பூஜை கடந்த 26-ந்் தேதி தொடங்கியது. இதையொட்டி வாஸ்து பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம் நடந்தது. தொடர்ந்து சாமிக்கு நெய் அபிஷேகம், புஷ்ப அலங்காரம், மகா மங்களாரத்தி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பழையபேட்டை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அய்யப்பன் சாமி ஊர்வலம் நடந்தது.
Related Tags :
Next Story