பொங்கல் விளையாட்டு போட்டி


பொங்கல் விளையாட்டு போட்டி
x

ராமநாதபுரம் அருகே பொங்கல் விளையாட்டு போட்டி நடந்தது.

ராமநாதபுரம்

பனைக்குளம்.

ராமநாதபுரம் அருகே உள்ள வழுதூர் கிராமத்தில் உள்ள அருளொளி விநாயகப் பெருமான் கோவிலில் பொங்கல் அன்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த ஊர் மக்கள் பங்கு பெற்ற பொங்கல் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. இளைஞர்களுக்கான செங்கல் இழுக்கும் போட்டி, யானைக்கு கண் வைக்கும் போட்டி, பெண்களுக்கான பாட்டிலில் தண்ணீர் நிரப்பும் போட்டி, சிறுமிகளுக்கான 100 மீட்டர், 50 மீட்டர் ஓட்ட போட்டிகள், மற்றும் சிறுவர்களுக்கான 50 மீட்டர், 100 மீட்டர் ஓட்டப்போட்டிகள், 15 வயதுக்கு மேற்பட்டோர் வயது வரம்பு இல்லாமல் கலந்து கொள்ளும் ஒரு கிலோமீட்டர் ஓட்ட பந்தயபோட்டிகள் என ஏராளமான விளையாட்டுபோட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு வழுதூர் அருளொளி மன்றத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story