பொங்கல் பொருட்கள், ரொக்கப்பணம் 9-ந்தேதி முதல் வினியோகம்


பொங்கல் பொருட்கள், ரொக்கப்பணம் 9-ந்தேதி முதல் வினியோகம்
x
தினத்தந்தி 1 Jan 2023 12:30 AM IST (Updated: 1 Jan 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பொங்கல் பொருட்கள், ரொக்கப்பணம் 9-ந்தேதி முதல் வினியோகம் செய்யப்படும் என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தை மாதம் 1-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் பொங்கல் பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் வருகிற 9-ந்தேதி முதல் ரேஷன்கடைகளில் அனைத்து அரிசி ரேஷன்கார்டுதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர் குடும்பத்துக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப்பணம் ஆகியவை வழங்கப்பட இருக்கின்றன.

டோக்கன் வினியோகம்

மேலும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கு, தெரு வாரியாக சுழற்சி முறையில் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. கிராமங்களில் தினமும் 200 ரேஷன்கார்டுதாரர்களுக்கும், நகரங்களில் 200 முதல் 250 ரேஷன்கார்டுதாரர்களுக்கும் வழங்கப்படும். இதையொட்டி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் 8-ந்தேதி வரை டோக்கன் வழங்கப்பட இருக்கிறது.

ரேஷன்கார்டில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் ரேஷன்கடைக்கு சென்று பொருட்களை வாங்கலாம். அதேபோல் பொங்கல் பொருட்கள் பெறுவது தொடர்பான புகார்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி எண் 0451-2460097, கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800-425-5901 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.


Next Story