பொங்கல் பண்டிகை: சென்னை - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் இயக்கம்
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
சென்னை,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை என்பதால், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து பணி நிமித்தமாக சென்னையில் தங்கி இருப்பவர்களும், கல்வி பயில வந்திருக்கும் மாணவர்களும் இன்று முதல் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
இதற்காக சென்னையில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தினசரி இயக்கப்படும் 2,100 அரசு விரைவு பேருந்துகளுடன் 4,706 சிறப்பு பேருந்துகளும் சேர்த்து 3 நாட்களுக்கு மொத்தம் 11,006 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. மேலும் பல்வேறு சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் சென்னை-நாகர்கோவில்-சென்னை இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story