திமுகவில் வாரிசு அரசியல் என்பது காலத்தின் கட்டாயம் - கடம்பூர் ராஜூ பரபரப்பு பேட்டி


திமுகவில் வாரிசு அரசியல் என்பது காலத்தின் கட்டாயம் - கடம்பூர் ராஜூ பரபரப்பு பேட்டி
x

வாரிசு அரசியலை எதிர்த்து தொடங்கப்பட்ட கட்சி தான் அதிமுக. என தெரிவித்தார்

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது ;

திமுகவில் வாரிசு அரசியியல் என்பது காலத்தின் கட்டாயம்.உதயநிதி மட்டுமல்ல அவருக்கு அடுத்த வாரிசு வந்தாலும் அவர்கள் தான் தலைமை தாங்கும் நிலை உள்ளது.

அதிமுகவில் வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை. வாரிசு அரசியலை எதிர்த்து தொடங்கப்பட்ட கட்சி தான் அதிமுக.திமுகவினரை பார்த்து பயப்படும் நிலையில் முதல் அமைச்சர் உள்ளார் .என தெரிவித்தார்


Next Story