தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்
திருச்சிற்றம்பலத்தில் தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது
திருச்சிற்றம்பலம்;
திருச்சிற்றம்பலம் கடைவீதியில் தமிழக முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் 70- வது பிறந்த நாளை முன்னிட்டு பேராவூரணி வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. அண்ணாதுரை எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.பேராவூரணி வடக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன் வரவேற்றார். அசோக்குமார் எம். எல். ஏ, தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட அவைத் தலைவர் சுப.சேகர், மாவட்ட கவுன்சிலர் அலிவலம் மூர்த்தி, சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் முத்துமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர் வண்ணை அரங்கநாதன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் அப்துல் மஜீத், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அரோ அருள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய அவை தலைவர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.