போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்தார்


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்தார்
x
தினத்தந்தி 24 Sept 2023 12:30 AM IST (Updated: 24 Sept 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பணிச்சுமை காரணமா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தென்காசி

சுரண்டை:

சுரண்டையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பணிச்சுமை காரணமா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பாண்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பசுபதி (வயது 55). இவர் ஊத்துமலை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி மணிமேகலை (48). இவர்களுக்கு விக்னேஷ் (29), வினித் (27) ஆகிய மகன்கள் உள்ளனர். பசுபதி தற்போது தனது குடும்பத்துடன் சுரண்டை நகராட்சிக்கு உட்பட்ட கீழச்சுரண்டை பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வருகிறார்.

விஷம் குடித்தார்

நேற்று காலை சுமார் 9 மணி அளவில் வீட்டில் பசுபதி மட்டும் தனியாக இருந்தார். அப்போது, அவர் திடீரென்று வயலுக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்தார். அப்போது, கடைக்கு சென்று திரும்பிய மணிமேகலை தனது கணவர் வாயில் நுரையுடன் கீழே விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பணிச்சுமையா?

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுரண்டை போலீசார், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பசுபதியிடம் தற்கொலைக்கான காரணம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பசுபதி குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது பணிச்சுமையால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் தற்கொலைக்கு முயன்றாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

சுரண்டையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story