போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்
மேலச்செவலில் போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் நடந்தது.
திருநெல்வேலி
முன்னீர்பள்ளம் பகுதியில் கடந்த சில நாட்களாக பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்சினையை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் மேலசெவலில் போலீசார்- பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சுபகுமார், ராஜா ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் முன்னிலை வகித்தார். இதில் வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அனைவரும் சாதி வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். குற்ற சம்பவங்கள் நடந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டனர்.
Related Tags :
Next Story