அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிப்பு


அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிப்பு
x

தற்கொலை செய்த பா.ம.க.பிரமுகர் உடல் பிரேத பரிசோதனை செய்வதற்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதால் போலீஸ் குவிக்கப்பட்டனர்.

வேலூர்

அடுக்கம்பாறை

தற்கொலை செய்த பா.ம.க.பிரமுகர் உடல் பிரேத பரிசோதனை செய்வதற்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதால் போலீஸ் குவிக்கப்பட்டனர்.

காட்பாடி தாலுகா வள்ளிமலையை அடுத்த பெரியபோடிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ் (வயது 60). பா.ம.க. பிரமுகரான இவர் நேற்று முன்தினம் காலை தனது வயலில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேல்பாடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரை சிலர் தற்கொலைக்கு தூண்டியதாக உறவினர்கள் மற்றும் பா.ம.க.வினர் சாலை மறியல் செய்தனர். இதனையடுத்து பெருமாள்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை நாகேஷ் உடல் பிரேத பரிசோதனை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. அப்போது உறவினர்கள் மற்றும் பா.ம.க.வினர் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தபோவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் பா.ம.க.வினர் நூற்றுக்கணக்கானோர் அடுக்கம்பாறை பஸ் நிறுத்தம் அருகே குவியத் தொடங்கினர்.

அதைத்தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட போலீசார் பஸ் நிறுத்தம் மற்றும் பிணவறை முன்பு குவிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. காலை 11 மணி அளவில் பிரேத பரிசோதனை முடிந்ததும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், உடலை எடுத்துச் சென்றனர்.


Next Story