போலீசார் தீவிர வாகன சோதனை
நெல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
திருநெல்வேலி
இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி நெல்லை மாவட்டத்தில் இருந்து பரமக்குடிக்கு செல்கின்ற வாகனங்கள் எண், மற்றும் முகவரி, ஆவணங்கள் குறித்து போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதியில் இருந்து பரமக்குடி செல்கின்ற வாகனங்களில் போலீசார் சோதனை நடத்தினார்கள். மேலும் நேற்று காலை முதல் இரவு வரை சோதனைச் சாவடிகள் மற்றும் முக்கிய இடங்களில் நின்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முறையான வாகனங்கள் அனுமதி சீட்டு மற்றும் முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. நெல்லை மாநகர பகுதியில் துணை போலீஸ் கமிஷனர் அனிதா நேரடி மேற்பார்வையில் அனைத்து உதவி கமிஷனர்களும், இன்ஸ்பெக்டர்களும் நேற்று விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story