விநாயகர் சிலைகள் கரைக்கும் இடத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து போலீசார் ஆய்வு


விநாயகர் சிலைகள் கரைக்கும் இடத்தில்  முன்னேற்பாடு பணிகள் குறித்து போலீசார் ஆய்வு
x

ஆரணி அருகே விநாயகர் சிலைகள் கரைக்கும் இடத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து போலீசார் ஆய்வு செய்தனர்.

திருவண்ணாமலை

ஆரணி

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி நாடு முழுவதும்கொண்டாடப்பட உள்ளது. ஆரணி நகரில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்து முன்னணியினர் மற்றும் விழா குழுவினர் விநாயகர் சிலைகளை வைத்து 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை விழா நடத்துவது என முடிவு செய்திருந்தனர்.

விநாயக சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று 22-ந் தேதி ஆரணி அருகே பையூர் பாறை குளத்தில் கரைக்கும் பணி நடைபெற உள்ளது.

இதையொட்டி அந்த பகுதியில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், ஷாபுதீன், கிருஷ்ணமூர்த்தி, மகேந்திரன் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் கூறுகையில், குளத்தை சுற்றிலும் பாதுகாப்பு பணி மேற்கொள்வதற்காக குளத்தைச் சுற்றி உள்ள முள் செடிகளையும் குப்பைகளையும் அகற்றி சீரமைக்கப்படும்.

மேலும் குளத்தை சுற்றிலும் தடுப்பு வேலிகள் கட்டைகளால் கட்டப்படும். போதிய வெளிச்சம் வரும் தரும் வகையில் மின்விளக்குகள் அமைக்கப்படும். விநாயகர் சிலைகள் கரைக்க பொக்லைன் எந்திரங்கள் நிறுத்தப்படும். இதற்கான பணிகள் நடைபெற உள்ளது என்றார்.


Related Tags :
Next Story