வாணியம்பாடியில் போலீஸ் கொடி அணிவகுப்பு


வாணியம்பாடியில் போலீஸ் கொடி அணிவகுப்பு
x

வாணியம்பாடியில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

வாணியம்பாடியில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது.

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில், கூடுதல் போலீஸ் சூப்பரெண்டு முத்துபாண்டியன் தலைமையில், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் முன்னிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் அணிவகுப்பு நடத்தப்பட்டது. பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி அணிவகுப்பு சி.எல்.ரோடு, கச்சேரி ரோடு, முகமது அலி பஜார், திருவள்ளுவர் தெரு, ஆசிரியர் நகர் வழியாக சென்று மீண்டும் பஸ்நிலையத்தை அடைந்தது.

இதில் பேண்டு வாத்தியம் இசைக்க, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஹேமாவதி, மலர், சாந்தி, துரைராஜ் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீசார் 300 பேர் கலந்து கொண்டனர்.


Next Story