போலீஸ் கொடி அணிவகுப்பு
திருப்பத்தூரில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது.
திருப்பத்தூர்
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருப்பத்தூரில் போலீசாரின் கொடி அணி வகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்து வழி நடத்தினார். அணிவகுப்பு தூய நெஞ்சம் கல்லூரியில் தொடங்கி கலெக்டர் அலுவலகம், பொன்னியம்மன் கோவில் தெரு, தண்டபாணி கோவில் தெரு, கோட்டை சிவன் கோவில் தெரு, ஜின்னா சாலை, மீனாட்சி தியேட்டர் வழியாக புதுப்பேட்டை ரோட்டில் முடிவடைந்தது. இதில் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story