கோவை சம்பவம் எதிரொலி: சென்னையில் சாலைகளில் ேகட்பாரற்று நின்ற வாகனங்கள் பறிமுதல்


கோவை சம்பவம் எதிரொலி: சென்னையில் சாலைகளில் ேகட்பாரற்று நின்ற வாகனங்கள் பறிமுதல்
x

கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக, சென்னையில் சாலைகளில் நீண்ட நேரம் கேட்பாரற்று நின்ற வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை

கார் வெடிப்பு சம்பவம்

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சாலைகளில் நீண்ட நேரம் கேட்பாரற்று நிற்கும் கார் உள்ளிட்டவாகனங்ளை பறிமுதல்செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி உள்ளிட்ட நகரங்களில் கேட்பாரற்று நின்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மற்ற நகரங்களிலும் பறிமுதல் நடவடிக்கை தொடர்கிறது. சென்னையிலும் சாலை உள்ளிட்ட இடங்களில் கேட்பாரற்று நின்ற வாகனங்களை பறிமுதல் செய்ய போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார்.

1,027 கார்கள் பறிமுதல்

அதன்படி நேற்று முன்தினம் இரவு முதல் சாலைகள் ஓரம், வாகனம் நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நீண்டநேரம் கேட்பாரற்று நின்ற கார் உள்ளிட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். கார்கள் மட்டும் அல்லாது ஆட்டோக்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை கூட கைப்பற்றினார்கள்.

அந்த வகையில் 1,027 கார் உள்ளிட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர். அதில் வாகன நம்பரை வைத்து உரிமையாளர்களை கண்டுபிடித்து 56 வாகனங்களை உரியவர்களிடம் திருப்பி ஒப்படைத்தனர். மீதி உள்ள வாகனங்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story