ஆடல், பாடல் நிகழ்ச்சியை பார்த்த வாலிபர் மீது போலீசார் தாக்குதல்


ஆடல், பாடல் நிகழ்ச்சியை பார்த்த வாலிபர் மீது போலீசார் தாக்குதல்
x

ஆடல், பாடல் நிகழ்ச்சியை பார்த்த வாலிபர் மீது போலீசார் தாக்கினர்.

திருச்சி

மணப்பாறை:

மணப்பாறையை அடுத்த விடத்திலாம்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள மேடையில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை ஏராளமானவர்கள் பார்த்தனர். இதில் ஆணையூரை சேர்ந்த யோகேஷ்வரன்(வயது 22) என்ற வாலிபர் ஒலி பெருக்கி அருகே நின்று வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு சென்ற 2 போலீஸ்காரர்கள், யோகேஷ்வரனை திடீரென தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டதால், அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த வாலிபரின் உறவினர்கள் உள்ளிட்டோர் மணப்பாறை அரசு மருத்துவமனையில் திரண்டனர். மேலும் வாலிபரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மணப்பாறை - விராலிமலை சாலையில் மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம் மணப்பாறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து, அவர்கள் மறியலை கைவிட்டனர்.


Next Story