கந்தம்பாளையம் அருகே கிணற்றில் முதியவர் பிணம் மீட்பு தற்கொலையா? போலீசார் விசாரணை


கந்தம்பாளையம் அருகே  கிணற்றில் முதியவர் பிணம் மீட்பு  தற்கொலையா? போலீசார் விசாரணை
x

கந்தம்பாளையம் அருகே கிணற்றில் முதியவர் பிணம் மீட்பு தற்கொலையா? போலீசார் விசாரணை

நாமக்கல்

கந்தம்பாளையம்:

கந்தம்பாளையம் அருகே கிணற்றில் முதியவர் பிணம் மீட்கப்பட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனநிலை பாதித்தவர்

கந்தம்பாளையம் அருகே உள்ள புளியம்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 75). இவர் கடந்த 3 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றிதிரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை என தெரிகிறது. அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இது ஒருபுறம் இருக்க மேல் சாத்தம்பூரில் உள்ள சக்திவேல் என்பவரின் விவசாய கிணற்றில் ஒரு முதியவர் பிணம் மிதப்பதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அந்த கிணற்றுக்கு சென்றனர். மேலும் தகவல் அறிந்து திருச்செங்கோடு தீயணைப்பு படை வீரர்களும் அங்கு சென்று கிணற்றில் இறங்கி முதியவரின் பிணத்தை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

விசாரணை

இதையடுத்து போலீசார் விசாரணையில் கிணற்றில் பிணமாக மிதந்தது புளியம்பட்டியை சேர்ந்த பழனி என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் பழனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனி கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story