விஷ சாராய விவகாரம் - கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அ.தி.மு.க. முடிவு
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை நடந்துள்ளது. இந்த சாராயத்தை வாங்கி குடித்த பலரும் பல்வேறு உடல் உபாதைகளுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்தனர்.
நேற்று காலையில் இருந்து சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது வரை விஷ சாராயத்துக்கு 35 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில், கள்ளச்சாராயம் மரணங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அ.தி.மு.க. முடிவுசெய்துள்ளது. சபாநாயகர் அப்பாவுவிடம் மனு கொடுத்து நாளை விவாதிக்க அ.தி.மு.க.வினர் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story