சின்னத்திரை நடிகை மீது கவிஞர் சினேகன் போலீசில் புகார்


சின்னத்திரை நடிகை மீது கவிஞர் சினேகன் போலீசில் புகார்
x

சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பா.ஜ.க. பிரமுகர் ஆவார்.

சென்னை, ஆக.6-

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியும், திரைப்படங்களுக்கு பாடல் எழுதும் கவிஞருமான சினேகன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் சினேகம் என்ற பெயரில் கடந்த 2015-ம் ஆண்டு அறக்கட்டளையை பதிவு செய்து நடத்தி வருகிறேன். இதன் மூலம் தமிழகம் முழுவதும் பல சேவை திட்டங்களை செய்து வருகிறேன். இந்த நிலையில் எனது அறக்கட்டளை பெயரை சின்னத்திரை பிரபலமான ஜெயலட்சுமி பயன்படுத்தி நிதி வசூலிப்பதாக வருமான வரித்துறை மூலம் எனக்கு தகவல் வந்தது.

நான் எனது மானேஜரை அனுப்பி விசாரித்த போது, அவர் போலியான முகவரி, இணையதளத்தை கொடுத்து என்னுடைய அறக்கட்டளையை இயக்குவது தெரியவந்தது. எனவே மோசடியில் ஈடுபட்ட ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது அறக்கட்டளையில் இயங்கும் போலி இணையதளத்தை முடக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பா.ஜ.க. பிரமுகர் ஆவார்.


Next Story